மிஸ்டர் சுகவனம் - பாகம் 1
அது ஒரு சித்திரை மாத புதன்கிழமை, பகல் பொழுதில் வெயில் சுட்டெரிப்பது நிச்சயம் என்றாலும், அதி காலை 5 மணி குளிர்ந்த தட்பவெப்பநிலையில் பொழுது விடிந்தது. படுக்கையிலிருந்து விடுபட முயற்சி செய்த வண்ணம் தனது இடக்கையை அருகிலிருந்த மேஜையின் மீது வைத்து மூக்கு கண்ணாடியை தேட ஆரம்பித்தார், இறுதியில் வெற்றியும் அடைந்தார் மிஸ்டர் சுகவனம். தனது வாழ்க்கையில் அந்த மூக்கு கண்ணாடியை அடைந்தபோது அவர் சிலாகித்தது ஊருக்கே தெரியும், காரணம் அது கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் நடுதரப்பார்வை என மூன்றையுமே சமமாக காட்டக்கூடிய பிராக்ரசிவ் லென்சை கொண்டது என்ற விளக்கத்தை பலருக்கும் அளித்தார். அதை அணிந்து பழக 15 நாட்கள் மெடிக்கல் லீவ் எடுத்தார். அப்படிப்பட்ட கண்ணாடியை அணிந்துகொண்டு தூக்கதிலிருந்து விழித்ததும் தன் முகத்தையே கண்ணாடியில் பார்த்து சிரித்துக்கொண்டு, கடந்த 10 ஆண்டுகளாக விழித்ததும் தனது முகத்தையே பார்பதாக நினைத்துக்கொண்டார். ஆனால் அவர் கண் விழித்ததும் முதலில் பார்ப்பது சன் ஆப்டிக்ஸில் வாங்கிய தனது மூக்கு கண்ணடித்தான் என்பதை அறிந்திருக்கவில்லை.
பின்னர் பல் துலக்குதல் என்ற சிறியதொரு யுத்தத்தை நடத்தி முடித்து குளித்து தயாரானார். மூன்று நாட்களுக்கு முன் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் போது சுகவனம் தனது மொபைலில் பேசிக்கொண்டு வந்த விதத்தை பார்த்த பர்வதம் மாமி இவரையே அழைத்துச் சென்று தன் மகளுக்கு தங்க நகை வாங்குவது என்ற முடிவுக்கு வந்தார். அந்த அளவிற்க்கான அவரது செல்போன் உரையாடல் இருந்தது, அது அவர் உபயோகிக்கும் நெட்வொர்க்கின் கால் சென்டர் ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தார். எதை பேசினாலும் தன்மையோடு கேட்டு பதில் சொல்லியும் 24 மணி நேரத்தில் அனைத்தும் சரி செய்யப்படும் என்று பொதுவான பதிலை தெளிவாக கொடுக்கும் ஊழியரிடம் நமது சுகவனம் "நான் நினைத்தால் உங்கள் நெட்வொர்க்கை கவிழ்க்க ஒரு புது நெட்வொர்க்கை மக்களிடம் உருவாக்க முடியும்" என்று சவால் விட்டு பேசிக்கொண்டிருந்தார். பேசி முடித்து நிமிர்ந்து எதேர்ச்சையாக மாமியை பார்த்த அவர் "நம்மகிட்ட முடியுமா?" என்று அவர் சொன்னதை கேட்ட மாமி, சுகவனத்தை ஒரு பெரிய ஹீரோவாகவே பார்த்தார். இவரால் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவுமே இல்லை என தீர்க்கமாக நம்பினார். அன்று முதல் மாமி கண்டெடுத்த நாயகனாக பவனி வந்தார் சுகவனம்.
தொடரும்....
ஈகா
ReplyDeleteஆகா
அலுமை அருமை
my memory recollects as Kalki pl. go head. And add some humours, soon you will be do as kalki.
ReplyDeletegreat start,plz post the next episode and get into the plot asap
ReplyDeleteYar indha appavi sugavanam.Proceed next episode waiting
DeletePart 2 published
Delete