சுகவனத்தின் "ஸ்மார்ட்போன்" தேடல்
ஆழ்ந்த உறக்கத்திற்கு பின், குழந்தை மனதுடன் விழித்தெழுந்தார் சுகவனம்.... மனதில் எந்த ஒரு குழப்பமோ, சஞ்சலமோ, அவசரமோ, பதற்றமோ இல்லை....அடுத்த இலக்கு அலுவலகம் கிளம்புவது....
வழக்கம்போல் தனது அதிகாலை யுத்தங்களை முடித்துவிட்டு... காலை உணவருந்த வந்தமர்ந்தார்.... புவனா பரிமாறினாள்...
தனது வழக்கமான பாணியிலேயே பயணப்பட்டு அலுவலகம் வந்தடைந்தார்...
காலையிலேயே ஒரு ரிப்போர்ட் வாங்க வினோத் சுகவனத்தின் இருக்கை அருகே காத்திருந்தான்...
வினோத் கையில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன், ஆழ்ந்த சிந்தனையோடு தனது விரல்களால் ஸ்மார்ட்போனின் திரையை மேலும் கீழுமாக தள்ளிக்கொண்டிருந்தான்...
"புது போனா... தெரியுது... அதை எதுக்கு என் முன்னாடி வச்சு கொஞ்சிக்கிட்டு இருக்கே...." என்றார் சுகவனம்
"இல்ல... சுகு... ஒரு கஸ்டமர் போன் நம்பர் கொடுத்தாரு... இதுலதான் ஸ்டோர் பண்ணி வச்சேன்... இப்ப காணல..." என்றான் வினோத்
"முதல்ல... போன் நம்பர் ஸ்டோர் பண்ண கத்துக்கிட்டயா... ஸ்மார்ட்போன் வாங்கிட்டா மட்டும் போதுமா... எப்பவுமே பேப்பர் பேனாதான் பெஸ்ட்..." என்றார் சுகவனம்...
"சும்மா அதையே சொல்லாதீங்க சுகு... உங்களால வாங்க முடியல... இதெல்லாம் சயின்ஸ்... டெவலப்மென்ட்... " என்றான் வினோத், சுகவனத்தின் கிண்டல் பேச்சை நிறுத்துவதற்காக...
"காசு இருந்தா போதுமா?... அறிவியலை பயன்படுத்தனும்னா அறிவிருக்கணும்...." என்று சற்றும் யோசிக்காமல்... உண்மையை போட்டுடைத்த சுகவனத்தின் பேச்சை கேட்டு வினோத் திகைத்துபோனான்...
அன்றைய முன்தினம் வினோத் அவசரத்தில் கஸ்டமர் கொடுத்த போன் நம்பரை டைப் செய்தானேயொழிய அதை பதிவு செய்ய மறந்து போனான்.... கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினான்...
"இதுக்கெல்லாம் கோபப்பட்டா எப்படிப்பா.. வா வினோத்.." என்று பிடித்து நிறுத்தினார்...
சுகவனம் சொன்னதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்ற எண்ணத்துடன் வினோத்தும் நின்றான்...
"நீங்க ஏன் ஸ்மார்ட்போனுக்கு மாறக்கூடாது..." என்றான் வினோத் மெதுவாக...
"இப்ப இ.எம்.ஐ. வசதியெல்லாம் இருக்கு சுகவனம்.." என்று முடித்தான்..
"இது என்ன போன்? எவ்வளவு....?" என்று கேட்டார் சுகவனம்..
"இது 'கேலக்ஸி ஏ9'..." என்றான் முணுமுணுத்தபடி...
"ம்...ஆஹ்... ஆஹ்...ம்... என்னது..." என்றார் சுகவனம்
தான் சரியான பெயரைத்தான் சொல்கிறோமா என்ற சந்தேகத்துடன் அந்த போனை முன்னும் பின்னும் சுழற்றி பார்த்துவிட்டு...
"சாம்சங் கேலக்ஸி ஏ9" என்றான் சத்தமாக...
"நான் 3000 ரூபாய்தான் கொடுத்தேன்... மிச்சம் இ.எம்.ஐ. போட்டுட்டேன்..." என்றான் வினோத்...
மேற்கொண்டு அவனிடம் விலையை கேட்க சுகவனத்திற்கு விருப்பமில்லை.
நாமளும் இன்னைக்கு சாய்ந்திரம் அலுவலகம் முடிந்தவுடன் கடைக்கு போறோம்... வாங்குறோம்... என்று முடிவு செய்தார்...
அலுவலகத்தில் 24 மணி நேரமும் இன்டர்நெட் வசதியுள்ள கணினி சுகவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது...
"ஏன் சாய்ந்திரம் வரைக்கும்... இப்பவே... ஆன்லைன்ல எது லேட்டஸ்ட் மாடல்னு ஏன் ஆராயக்கூடாது..."
உடனே கணினி முன் அமர்ந்த சுகவனம்... "வலைதளத்தினுள் விழுந்தார்...."
முதல்ல எந்தக் கடையிலே நல்ல பிராண்ட் போன்கள் நிறைய இருக்குன்னு பார்ப்போம்... என முடிவு செய்தார்...
எந்த கடையிலும் நல்ல பிராண்டை விட... அவர்களுக்கு நல்ல லாபம் தரும் பிராண்டையே 'வற்புறுத்தி' (அதாவது.. அதன் பெருமைகளை எடுத்துச் சொல்லி) விற்பார்கள் என்ற வியாபார உத்தியை சுகவனம் அறிந்திருக்கவில்லை...
சிட்டியிலேயே அதிக கிளைகள் கொண்டது "பூர்ணவிகா" மட்டுமே...
ஆங்கிலத்தில்... POORNAVIKA... Your Mobile... Our choice...
தமிழில்... பூர்ணவிகா.... உங்கள் மொபைல்... எங்கள் சாய்ஸ்...
என்ற தாரக மந்திரம் அவர்களுடையது...
வருடத்திற்கு ஒரு நடிகை அழகாக (......!?) அதற்க்கு விளம்பர மாடலாக இருப்பார்கள்....
சுகவனமும் "பூர்ணவிகா" வலைதளத்தினுள் பிரவேசித்தார்....
கணினி முன் அவர் அமர்ந்தபோது மதியம் சுமார் 1.30 மணி இருக்கும்...
ஆராய்ச்சி முடியாத நிலையில் அவரது கண்கள் எரிய ஆரம்பித்தது...
"டீ ரெடி ஆகிடுச்சு சார்..." என்று தூரத்தில் ஒரு குரல் கேட்பது போல இருந்தது...
உள்ளுணர்வில் ஏதோ ஒரு எண்ணம் தோன்றி மணி பார்த்தார் - மாலை 4.15 ஆகி இருந்தது...
சுகவனத்திற்கு சிரிப்பு பொங்கியது... தனியாக சிரித்தால் வேறு மாதிரி ஆகிவிடுமே என்கிற எண்ணத்துடன் திருதிருவென முழித்துக்கொண்டிருந்தார்....
அந்த நேரம் அங்கு வந்த வினோத்... "என்ன சுகு....என்னாச்சு..."என்றான்...
"ஒண்ணுமில்லடா எந்த போன் இப்ப விலை குறைவாகவும் நல்ல தரமாகவும் இருக்குதுனு நெட்ல தேடிட்டிருந்தேன்...." என்றார் சுகவனம்
"கண்டுபிடிச்டீங்களா..." என்றான் வினோத்
அவ்வளவுதான்.... சுகவனம் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்... கண்களில் தண்ணீர் வரும் வரை சிரித்து தீர்த்தார்..
"அதைத் தவிர பாக்கி எல்லாத்தையும் கண்டுபிடிச்சிட்டேன்..." என்றார் சிரிப்புக்கிடையே...
"பாக்கி எல்லாத்தையும்னா?..." என்றான் வினோத்
"ஒவ்வொரு போனுக்கும் ஒவ்வொரு நடிகை விளம்பரம் பண்ணறாங்க...
அவங்கள பத்தின லேட்டஸ்ட் கிசுகிசு வரைக்கும்... எல்லாத்தையும் படிச்சிட்டேன்..." என்றார்.... அவரை நினைத்து அவரே சிரித்துக்கொண்டு...
"சரி நான் கிளம்புறேன்!..." எனச் சொல்லி கிளம்பினான் வினோத்
"ச்.. சே.... வலைத்தளம்னு சரியாத்தான் பேர் வச்சிருக்கானுங்க... எப்படி சிக்குனேன்னு எனக்கே தெரியல... "பூர்ணவிகா" வலைதளத்துக்கு உள்ளே போனோம் அங்கிருந்து எப்படி வெளியிலே போனோம்?...ச்சே...." என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டு.....
"சரி... இனிமேலயாவது கொஞ்சம்... வேலைய பார்ப்போம்...
வாங்குற சம்பளத்துக்கு உண்மையா இருக்கணும்... " என்று தன் வழக்கமான நையாண்டி பாணியிலே நினைத்துக்கொண்டு வேலையை தொடர்ந்தார்...
நேரம் மாலை 5.30....
"சரி... கிளம்பி நேரா "பூர்ணவிகா" போறோம்... மொபைல் போன் வாங்குறோம்... " என்று கிளம்பினார் சுகவனம்...
இம்முறை சுகவனத்தால் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி "பூர்ணவிகா" விற்பனையளருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
தொடரும்...
Nice man whose is Vinoth character
ReplyDeleteAs you wish
DeleteYour published as unknown, may I know who is this...
DeleteNow I'm wondering what phone sugavanam will buy and also worried about the fate of that poor phone in his hands.
ReplyDeleteDeja Vu Kalki & Devan
ReplyDelete